Friday, December 17, 2010

Kamalharan Poem - நைவதே நென்றனின் நை

கிரகணாதி கிரகணங்கட் கப்பாலுமே ஒரு
அசகாய சக்தி உண்டாம்
ஆளுக்கு ஆளொரு பொளிப்புரை கிறிக்கியும்
ஆருக்கும் விளங்காததாம்

அதை பயின்று அதை உணர்ந்து அதை துதிப் பதுவன்றி
பிறிதேதும் வழி இல்லையாம்
நாம் செய்த வினையெலாம் முன்செய்த தென்றது
விதி ஒன்று செய்வித்ததாம்

அதை வெல்ல முனைவோரை சதிகூட செய்தது
அன்போடு ஊழ் சேர்க்குமாம்
குருடாக செவிடாக மலடாக முடமாக
கருசோ்க்கும் திருமூலமாம்

குஷ்ட துஷ்யம் புற்று சூலை மூலம்
என்ற குரூரங்கள் அதன் சித்தமாம்
புண்ணில் வாழும் புழு புண்ணியம் செய்திடின்
புது ஜென்மம் தந்தருளுமாம்

கோடிக்கு ஈஸ்வரர்கள் பெரிதாக வருந்தாமல்
சோதித்து கதி சேர்க்குமாம்
ஏழைக்கு வருதுயரை வேடிக்கை பார்ப்பததன்
வாடிக்கை விளையாடலாம்

நேர்கின்ற நேர்வெலாம் நேர்விக்கும் நாயகம்
போர்கூட அதனின் செயலாம்
பரணிகள் போற்றிடும் உயிர்கொல்லி மன்னர்க்கு
தரணி தந்தது காக்குமாம்

நானூறு லட்சத்தில் ஒரு விந்தை உயிர் தேற்றி
அல்குலின் சினை சேர்க்குமாம்
அசுரரைப் பிளந்தபோல் அணுவையும் பிளந்தது
அணுகுண்டு செய்வித்ததும்

பரதேசம் வாழ்கின்ற அப்பாவி மனிதரை
பலகாரம் செய்துண்டதும்
பிள்ளையின் கறியுண்டு நம்பினார்கருளிடும்
பரிவான பரப்பிரம்மமே

உற்றாரும் உறவினரும் கற்று கற்பித்தவரும்
உளமாற தொளுசக்தியை
மற்றவர் வையுபயம்கொண்டு நீ போற்றிடு
அற்றதை உண்டென்றுகொள்

ஆகமக் குளமூழ்கி மும்மலம் கழி
அறிவை ஆதிக்கச் சலவையும் செய்
கொட்டடித்து போற்று மணியடித்து போற்று
கற்பூர ஆரத்தியை

தையாட ஊசியிர்த் தையெனத் தந்தபின்
தக்கதைத் தையாதிரு
உய்திடும் மெய்வழி உதாசீனித்த பின்
நைவதே நென்றனின் நை

Saturday, November 20, 2010

தினம் பாடி வா மனமே

கவிஞர் அறிவுமதி எழுதி வித்தியாசாகர் இசையில் சுதாரகுநாதன் பாடிய... மந்திரப்புன்னகை திரைப்பட  பாடல் 

என்ன குறையோ


கண்ணா கண்ணா கண்ணா

என்ன குறையோ என்ன நிறையோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்

என்ன தவறோ என்ன சரியோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்

என்ன வினையோ என்ன விடையோ
அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன் (2)

என்ன குறையோ என்ன நிறையோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்


நன்றும் வரலாம் தீதும் வரலாம்
நண்பன் போலே கண்ணன் வருவான்

வலியும் வரலாம் வாட்டம் வரலாம்
வருடும் விரலாய் கண்ணன் வருவான்

நேர்கோடு வட்டமாகலாம்
நிழல் கூட விட்டுப்போகலாம்
தாழாத துன்பம் நோ்கையில்
தாயாக கண்ணன் மாறுவான்

அவன் வருவான் கண்ணில் மழை துடைபடபான்
இருள் வழிகளிலே புது ஒளி விதைப்பான் - அந்த
கண்ணனை அழகு மன்னனை தினம் பாடி வா மனமே

என்ன குறையோ என்ன நிறையோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்

கண்ணன் கண்ணன் கண்ணன்

உண்டு எனலாம் இல்லை எனலாம்
இரண்டும் கேட்டு கண்ணன் சிரிப்பான்

இணைந்து வரலாம் பிரிந்தும் தகலாம்
உறவைப் போலே கண்ணன் இருப்பான்

பனி மூட்டம் மலையை மூடலாம்
பழி கேட்டு பறவை வாடலாம்
புதிரான கேள்வி யாவிலும்
விடையாக கண்ணன் மாறுவான்

ஒளிந்திருப்பான் எங்கும் நிறைந்திருப்பான் அவன்
இசை மழையாய் உலகினை அணைப்பான் - அந்த
கண்ணனை கனிவு மன்னனை தினம் பாடி வா மனமே

Thursday, November 4, 2010

India's national language is English - எனக்கென்னமோ “காதல்“ கூட நல்லாருக்கு

Kamalahasan

If you force people to speak Tamil, they won't do it.
What we have to inform today is, they say it's an English attraction. But it's not- This is 'American attraction', We should understand that first.

We learn a language that is being spoken so widely in the world, and so easily... In fact, some people's wrath may be kindled when I say that: India's - national language - today, - is English.

That's the truth.

Tamils may say "Hail Tamil!", Telugu's may say "Hail Telugu!"' Tamils and Telugu, Tamils and Kannadigas, Kannadigas and Marathi and Gujarati- it has happened that they can converse only in English today.


“காதல்“ எங்கிறதை என்னமோ கெட்ட வார்த்தைன்னு ஆக்கீட்டாங்க
I love you ன்னு தான் சொல்றாங்க,  எனக்கென்னமோ “காதல்“ கூட நல்லாருக்கு
I'm not speaking against Hindi here!

Even if Hindi people need to converse with Tamils, English becomes the common language. This language is just a tool. Let's just use it like that.

But each and everyone's mother tongue, is much older than English.. For example, we would realize the importance of our dad's walking stick and photos, only after he dies!
When he is alive, we would never realize his importance. That shouldn't happen to Tamil!



Once you get hooked by the lure of Tamil, Then you just can't come off it! But how you hook, like saying "who bells the cat", "how to hook the mouth of the fish" is important.
Then the fish will be hooked. Can be cooked and relished! That would be a "Tamil Feast"!

Kamalhasan

Wednesday, October 6, 2010

அம்மனுக்குப் பூப்புனித நீராட்டு

கேரள மாநிலம் செங்கண்ணூர் எனும் ஊரிலுள்ள பகவதி கோயில் தலத்தில் பார்வதிதேவி பூப்படைந்தாள் என்றும், இதையொட்டி இங்கு ருதுசாந்தி கல்யாணம் (பூப்புனித நீராட்டு விழா) நடைபெற்றது என்று தலபுராணம் கூருகிறது.

"Chakkulathukavu Sree Bhagavathy Amman"
Kerala, India

இந்தக் கோயிலில் அர்ச்சகர் அபிசேகத்திற்காக அம்மன் மீதிருந்த ஆடையைக் களைந்த போது, அதில் ஒரு கறை படிந்திருப்பதைக் கண்டு சந்தேகமடைந்தார். அவர் தாழமண் போற்றியிடம் அந்த ஆடையைக் காட்டினார். அவர் வீட்டிலிருந்த பெண்களிடமும் காட்டினார். அவர்கள் அதை உறுதிப்படுத்தினார்கள். உடனே அம்மனின் சிலையை எடுத்து, வடக்கு மூலையில் தனியாக ஒரு பந்தலில் வைத்தார்கள். மூன்று நாட்களும் ஊர்ப் பெண்மணிகளில் சிலர் இரவில் கருவறைக்கு வெளியில் காவல் இருந்தார்கள். நான்காவது நாள் அம்மனை அருகிலுள்ள பம்பா நதியின் கிளை நதியான மித்ரபுழை கடவுக்கு எடுத்துச் சென்று, எண்ணெய் தேய்த்து நீராட்டம் செய்து, யானையின் மீது அமரச் செய்து, சிறப்பான விழாவாகக் கோயிலுக்கு அழைத்து வந்தார்கள். அதன் பின் வழக்கப்படி பூசைகள் தொடர்ந்தன. மாதந்தோறும் மூன்று நாட்கள் பகவதி மாதவிடாய் ஆனார். அதைத் திருப்பூத்து என அழைத்தார்கள். மூன்று நாட்கள் கருவறை அடைக்கப்பட்டது. திருப்பூத்தாறாட்டு விழா புகழடைந்தது.

அதன் பிறகு ஒரு நாள் ஏற்பட்ட தீ விபத்தில் அம்மன் சிலை சேதமடைந்து போய்விட்டது. அதற்குப் பதிலாக பஞ்சலோக சிலை ஒன்று உருவாக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. அம்மனின் சக்தி குறைந்து போய்விட்டது. சிறப்புப் பூஜைகள் பல செய்து சக்தி அதிகரிக்கப்பட்டது. இருப்பினும் மாதந்தோறும் நடைபெற்ற பூப்பு நிகழ்வு நின்று போய், ஒழுங்கு நியதிகளுக்கு உட்படாமல் குறிப்பிட்ட வரையறை இல்லாமல் வருடத்திற்கு ஒருமுறை அல்லது இருமுறை என மாற்றமடைந்து போய்விட்டது.

முக்கிய அர்ச்சகரான மேல்சாந்தி தினமும் பகவதியின் மீதுள்ள வெள்ளைத்துணியைக் களைந்து கருவறைக்கு வெளியே வைத்து விடுகிறார். ஆலயத்தில் பூமாலை தொடுக்கும் பணியை மேற்கொண்டிருக்கும் வாரியர், அந்த ஆடையை எடுத்துப் பார்க்கிறார். அதில் சந்தேகத்திற்குரிய கறை பட்டிருந்தால், அதை ஆலய அலுவலகத்தில் சேர்க்கிறார். கோயில் நிர்வாக அதிகாரி அந்த் ஆடையை த்ந்த்ரியின் இல்லத்திற்கும், வஞ்சிப்புழ மடத்திற்கும் அனுப்பி வைக்கிறார். அங்குள்ள வயதான பெண்மணிகள் அதைப் பார்வையிட்டு திருப்பூத்து ஆகியிருக்கிறது என்ற முடிவுக்கு வந்தால் அந்த ஆடையை மீண்டும் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள். அது பக்தர்களின் பார்வைக்காக மூன்று நாட்கள் வைக்கப்படுகிறது. உற்சவமூர்த்தி வெளியிலுள்ள வடக்குப் பிரகாரத்தில் தனியாக வைக்கப்பட்டு பூசை நடத்தப்படுகிறது.

பகவதி திருப்பூத்து ஆகியிருக்கும் செய்தி அறிவிக்கப்பட்டவுடன் அம்மன் கோயிலின் கதவு அடைக்கப்படும். இம்மூன்று நாட்களும் த்ந்திரி ஒருவேளை பூசை மட்டும் செய்கிறார். அம்மூன்று நாட்களும், மூலவிக்ரகத்திற்கு வேறொரு துணியை அணிவிக்கிறார்கள். திருப்பூத்தின் நான்காவது நாள் ஆறாட்டுக் கடவுக்குக் கொண்டு செல்லப்பட்டு, எண்ணெய்க் குளியல் செய்யப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்படுகிறார்.

பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட பகவதியின் திருப்பூத்து ஆடை வேண்டி கோயிலில் பதிவு செய்து கொண்டிருப்பவர்களில் முன்னுரிமையுடையவருக்கு கொடுக்கப்படுகிறது. அந்த உடைக்கு கோயில் நிர்வாகம் அவ்வப்போது அறிவிக்கும் கட்டணம் பெறப்படுகிறது

இங்கிருந்து

Thursday, September 30, 2010

தமிழ்ச்சினிமாவுக்கு ஒரு எச்சரிக்கை


எழுதியவர் மாதவராஜ்

உங்களுக்கு தமிழ்ச்சினிமாவில் பிடிக்காத இயக்குனர் யார் என்று கேட்டால், உடனடியாக ஷங்கர் என்று சொல்வேன். அப்படியொரு திடமான நம்பிக்கை. நம் நிறத்தின், பண்பாட்டின், அடையாளங்களின், விழுமியங்களின், மகத்துவங்களின் மீது அப்படியொரு வன்மமும், துவேஷமும் ஷங்கரின் படங்களில் தொடர்ந்து இருக்கிறது.

அபூர்வ ராகங்களில் துளிர்த்து, முள்ளும் மலரில் வளர்ந்த ரஜினிகாந்த் என்னும் நடிகர், தான் வந்த பாதையை மறந்து இன்று திசைமாறி எங்கோ போய்விட்டார். தன்  ரசிகர்களின் பிரியத்தை, அவர்கள் மீது தான் இதுகாறும் உருவாக்கியிருந்த செல்வாக்கினை காசாக்கிப் பார்க்கும் நோக்கம் தவிர வேறேதும் அவரிடம் இப்போது தென்படவில்லை.

மொத்த தமிழ் சினிமாவையும் தன் உள்ளங் கைக்குள் அடக்கி வைக்கும் ஏகபோகமாக தன் நிறுவனம் உருவெடுக்க வேண்டும் என்கிற வெறியும், வேட்கையும் கொண்டவராக கலாநிதி மாறன் சமீப காலங்களில் தனக்கான அரசியல் அதிகாரம் பயன்படுத்தி முன்னுக்கு வந்திருக்கிறார். சினிமா, அதன் கலை அழகு, வடிவம், மொழி எல்லாவற்றையும் சிதைத்து, தன் பண வேட்டைக்கான களமாக அதனை மாற்றிடும் அகோரப்பசியோடு சன்நிறுவனம் இன்று காட்சியளிக்கிறது.

இந்த கூட்டுத் தொழிலில், உருவாக்கிய சினிமாவான எந்திரன் குறித்து எகிறி எகிறிப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். எந்திரன் படத்தின் ஸ்டில்ஸ்களுக்கு முன்னால், இந்த தேசத்தின் விலைவாசி உயர்வுப் பிரச்சினையெல்லாம் அற்பமானதுதான்  தினகரன் பத்திரிகைக்கும் சன் டி.வி குழுமத்திற்கும். “இந்தியச் சினிமாவில் சரித்திரம் படைக்கப் போகும் படம் இது என்கிறார் ரஜினி. சத்யஜித்ரேவையெல்லாம் எங்கே கொண்டு போய் வைக்க என்று தெரியவில்லை

பிரம்மாண்டம், பிரம்மாண்டம் என்று கதைக்கிறவர்களுக்கும், வித்தியாசம் என மார்தட்டுபவர்களுக்கும் நடிகர் விவேக் பேசியதைத்தான் சுட்டிக்காட்ட வேண்டும். ஆமையும் முயலும் கதையினை ஷங்கர் எடுக்க வேண்டும். அதனை ஜெர்மனியில் உள்ள பெரும் மைதானத்தை வாடகை எடுத்தோ அல்லது விலைக்கு வாங்கியோ படம் எடுக்க வேண்டும். மேலே நான்கு ஹெலிகாப்டரில் வைத்து அந்தக் காட்சிகளை படமாக்க வேண்டும் என்று அவர் நகைச்சுவையாக பேசியதில் உண்மைகளும் இருக்கின்றன.

எந்திரன் படப்பிடிப்பின் கடைசி நாளன்று பெரிய கேக் வெட்டி விழா. அதுகுறித்துச் செய்திகள். அப்புறம் அதன் பாடல்கள் வெளியீட்டு விழா. அது குறித்து தொலைக் காட்சியில் ஒளிபரப்பு நிகழ்ச்சிகள். அதன் வெளியீடு நடப்பதற்குள், என்ன திகிடுதத்தங்கள் எல்லாம் நடக்க இருக்கிறதோ! அதையெல்லாம் அவரவர் புத்திசாலித்தனத்துக்கேற்ப கலர் கலராய் வாந்தியெடுத்து, பிரமாதப்படுத்துவதற்கு என்று பலரும் இருக்கிறார்கள். சமூகப் பார்வையும், சினிமா குறித்து அக்கறையும் அற்ற இந்த ஜென்மங்களை என்ன செய்வது?

ஜஸ்ட் 150 கோடி செலவு செய்து..என்று பெருமிதமாய்ப் பேசுகிறார் ரஜினிகாந்த். நாளைய வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறதோ என்று அறியாத பெரும் கூட்டம் அதைக்கேட்டு இறுமாந்து போகிறது. இந்த ஜஸ்ட்டில் என்னவெல்லாம் இந்த தேசத்தில் செய்ய முடியும் என நினைத்தால் கொதிப்பாய் இருக்கிறது. காசு கொடுத்துப் பார்க்கிற யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லாமல், ஒரு படம் எடுத்து, அதற்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிற இந்த வியாபார உத்திகளின் மீது நமது கோபத்தைக் காட்டாமல், வேடிக்கைப் பார்க்கிற அல்லது ரசிக்கிற மனோபாவமே சமூகக் கேடு. அதைத் தகர்க்கிற மூர்க்கம் பொறுப்புள்ள பிரஜைக்கு வந்தாக வேண்டும்.

எத்தனை எத்தனையோ கனவுகளுடன், சமூக மாற்றம் குறித்த வேட்கையுடன் இங்கு பல இளைஞர்கள் சினிமா உலகத்திற்குள் காலடி எடுத்து வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களை தனது பிரம்மாண்ட கால் சுண்டு விரலால் நசுக்கிப் போட்டு விடும் இந்த எந்திரன்கள். சினிமா மொழி அறிந்த, அதன் நுட்பங்கள் தெரிந்த, நல்ல கதை சொல்லத் தெரிந்த புதிய இயக்குனர்கள் இப்போது முன்னுக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் தனது சூறாவளி வேகத்தில் இருக்கும் இடம் தெரியாமல் செய்துவிடும் இந்த எந்திரன்கள்.  யதார்த்தங்களை விட்டு சினிமாவை வெற்று பிம்பங்கள் நிறைந்ததாக, மாய உலகமாக, கைக்கு எட்டாத பிரதேசமாக தள்ளி நிறுத்தும் காரியமே எந்திரனின்  வருகையாய் இருக்கப் போகிறது. கதைகளுக்குத்தான் தொழில்நுட்பமே தவிர, தொழில்நுட்பத்திற்கு கதைகள் அல்ல!  பணத்தை மட்டுமே முன்னிறுத்தும் எதுவும், சமூகத்திற்கு உருப்படியாய் எதையும் தந்துவிட முடியாது.

சினிமா என்பது  இருபதாம் நூற்றாண்டு தந்த அற்புத கலைச்சாதனம். மகத்தான கலைஞர்கள் அதனைக் கையாண்டு சமூகத்தோடு எவ்வளவோ உரையாடல்களை ஏற்படுத்தி இருக்கிறார்கள். காலங்களைத் தாண்டி அவர்கள் தந்த காட்சிகள் இன்றும் உயிர்த்துடிப்போடு வலம் வருகின்றன. அப்படிப்பட்டவர்களை களங்கப்படுத்துவதோடு, சினிமா என்னும் அரிய பொக்கிஷத்தை கபளீகரமாக்க முயற்சிக்கும் எந்திரன்கள் குறித்து எச்சரிக்கை தேவைப்படுகிறது.

இது மக்களுக்கான சினிமா அல்ல, வியாபாரிகளுக்கான சினிமா!

காக்கைக்கா காகூகை

"காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
 கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க – கைக்கைக்குக்
 காக்கைக்குக் கைக்கைக்கா கா"
 - காளமேகப் புலவர்


அர்த்தம் -
காக்கை பகலில் ஆந்தையை ( கூகையை ) வெல்லும். 
கூகை இரவில் காக்கையை வெல்லும். 

அரசன் பகைவரிடத்திலிருந்து தம் நாட்டை இரவில் ஆந்தையைப் போலவும், பகலில் காக்கையைப் போலவும் காக்கவேண்டும். 

கொக்கு காத்திருப்பது போல தக்க நேரம் வரும் காத்திருந்து தாக்க வேண்டும். தகுதியற்ற காலம் எனில் தகுதியான அரசனுக்குக் கூட கையாலாகி விடக்கூடும்